TNPSC Thervupettagam

நாடாளுமன்றத்தின் "சிறப்புக் கூட்டத்தொடர்"

September 4 , 2023 322 days 199 0
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர் ஆனது கேள்வி நேரம் அல்லது தனிநபர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏதும் இல்லாமல் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • பொதுவாக, ஒரு வருடத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல், மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் நடைபெறும்.
  • ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தில் "சிறப்புக் கூட்டத் தொடர்" என்ற சொல்லானது பயன்படுத்தப்படவில்லை.
  • சில நேரங்களில் நாடாளுமன்ற அல்லது தேசியச் சாதனைகளை நினைவு கூருவது போன்ற குறிப்பிடத்தக்கச் சந்தர்ப்பங்களில் அரசினால் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத் தொடர்களை இந்தச் சொல் குறிக்கிறது.
  • இருப்பினும், அரசியலமைப்பின் 352வது சட்டப்பிரிவானது (அவசரநிலைப் பிரகடனம்) "அவையின் சிறப்புக் கூட்டத்தொடர்" எனும் சொல்லைக் கொண்டுள்ளது.
  • இரு அவைகளிலும் இந்தக் கூட்டத் தொடரை மேற்கொள்வதற்கு, அந்தந்த அவையின் தலைவர்கள் அந்தந்த அவையின் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்