TNPSC Thervupettagam

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்

July 28 , 2023 360 days 222 0
  • காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளார்.
  • நாடாளுமன்ற மக்களாட்சி முறையின் கீழ் தற்போதைய அரசாங்கமானது அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒரு நம்பிக்கையைக் கொண்டுள்ளதா என்பதைச் சோதிப்பதற்காக இந்தத் தீர்மானமானது இயற்றப் படுகிறது.
  • எந்தவொரு மக்களவை உறுப்பினரும், அவையைச் சேர்ந்த 50 உறுப்பினர்களின் கையெழுத்துடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தினைக் கொண்டு வரலாம்.
  • மக்களவையின் நடைமுறை மற்றும் நடப்பு விதிகளின் 198வது விதியின் கீழ், ஒரு உறுப்பினர் இதற்கான ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பினைக் காலை 10 மணிக்கு முன் வழங்க வேண்டும்.
  • இந்த எழுத்துப்பூர்வத் தீர்மானமானது சமர்ப்பிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் மக்களவை சபாநாயகர் அதனை அவையில் வாசிக்கச் செய்வார்.
  • சபாநாயகர் தீர்மானத்தினைச் சபையில் வாசித்தவுடன், சபாநாயகர் அந்த தீர்மானம் குறித்த விவாதத்திற்கான தேதி அல்லது தேதிகளை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
  • இந்தத் தீர்மானமானது, சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை மக்களவையில் கொண்டு வரப்படும் 28வது நம்பிக்கையில்லா தீர்மானமாகும்.
  • மேலும், தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்ளும் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவாகும்.
  • 2018 ஆம் ஆண்டில் முன் வைக்கப்பட்ட முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை இந்த அரசு தோற்கடித்தது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆனது, ஜவஹர்லால் நேரு அவர்களின் அரசுக்கு எதிராக 1963 ஆம் ஆண்டு ஆச்சார்யா J.B. கிருபாலனி அவர்களால் கொண்டு வரப்பட்டது.
  • இந்திரா காந்தி தனது 16 ஆண்டு கால அளவு ஆட்சியில் மொத்தம் 15 நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டார்.
  • ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் தலா ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டனர்.
  • பிரதமர்கள் சரண் சிங், V.P. சிங், சந்திர சேகர், H.D. தேவகவுடா மற்றும் I.K. குஜ்ரால் இத்தகைய தீர்மானங்களை எதிர்கொள்ளவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்