நாடு தழுவிய போலியோ எதிர்ப்பு தடுப்பூசி - பாகிஸ்தான்
September 25 , 2018 2254 days 672 0
5 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு நாடு தழுவிய போலியோ எதிர்ப்பு தடுப்பூசி செயல்பாட்டை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
இந்த செயல்பாடானது 2018 - 19 ஆம் ஆண்டின் குறைந்த பரிமாற்ற காலத்தில் தேசிய அளவிலான நாடு தழுவிய வீட்டுக்கு வீடான முதலாவது பிரச்சாரமாகும்.
உலகின் போலியோவால் பாதிக்கப்படும் பகுதிகளையுடைய 3 நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியாவுடன் இணைந்து பாகிஸ்தானும் ஒன்றாகும்.
உலக சுகாதார அமைப்பின் திட்ட அளவுப்படி, நாடு முழுவதும் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்தவொரு போலியோ பாதிப்புகளும் பதிவு செய்யப்படவில்லையெனில் அந்நாடு போலியோ அற்ற நாடாக கருதப்படும்.