TNPSC Thervupettagam

நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது குறித்த குழு

March 19 , 2024 254 days 396 0
  • 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழு தனது அறிக்கையை குடியரத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் சமர்ப்பித்துள்ளது.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.
  • நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குழு ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளது.
  • முதலில், மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதோடு அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் ஒத்திசைக்கப் பட்ட உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
  • "முழு பதவிக்காலம்" மற்றும் "நிறைவடைந்த பதவிக்காலம்" (மக்களவை அல்லது சட்ட சபை அதன் "முழு பதவிக் காலம்" நிறைவடைவதற்கு முன்பாகவே விரைவில் கலைக்கப் படுதல்) என்ற கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு வேண்டி அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
  • மேலும், மக்களவை அல்லது சட்ட சபை அதன் "முழு பதவிக் காலத்திற்கு" முன்பாக விரைவில் கலைக்கப்படுவதால் நடத்தப்படும் தேர்தல் "இடைக்கால" தேர்தலாகக் கருதப் படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • ஐந்தாண்டுகள் முடிந்த பிறகு நடத்தப்படும் தேர்தல் “பொதுத் தேர்தலாகக் கருதப் படும்.
  • இடைக்கால அவைக் கலைப்பு ஏற்பட்டால், மீண்டும் அமைக்கப்பட்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம், அதன் முழு காலமான ஐந்தாண்டுகளில் மீதமுள்ள பதவிக் காலம் வரை மட்டுமே இருக்கும்.
  • பின்னர் சம்பந்தப்பட்ட சட்டமன்றத்திற்காக நடத்தப்படும் அடுத்த தேர்தல் "பொதுத் தேர்தலுடன்" நடத்தப்படும்.
  • 1967 ஆம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது இந்தியாவில் ஒரு வழக்கமாக இருந்த நிலையில் நான்கு தேர்தல்கள் இவ்வாறு ஒரே நேரத்தில் நடத்தப் பட்டன.
  • 1968-69 ஆம் ஆண்டில் சில மாநிலச் சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
  • மக்களவையும் முதன்முறையாக, 1970 ஆம் ஆண்டில் ஒரு வருடம் முன்னதாகவே கலைக்கப் பட்டு 1971 ஆம் ஆண்டில் இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்