TNPSC Thervupettagam

நாடு வாரியான (Country by Country) அறிக்கை

March 23 , 2020 1616 days 473 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பானது  “அடிப்படைத் தேய்மானம் மற்றும் இலாப செயல் மாற்ற செயல் திட்டம் 13” என்ற ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது (BEPS - Base Erosion and Profit Shifting).
  • இது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தனது இலாபத்தை எங்கு ஈட்டியதோ, அதைச் சரியாகக் குறிப்பிடப்படுவதை உறுதி செய்ய இருக்கின்றது. 
  • “BEPS செயல் திட்டம் 13“ என்ற அறிக்கையானது பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான ஒரு வழிமுறையை வழங்குகின்றது.
  • இந்த அறிக்கையானது “நாடு வாரியான அறிக்கை” என்று அழைக்கப் படுகின்றது (CBC - Country by Country).
  • CBC ஆனது பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும் 
    • பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய வருமான அளவு, செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் இதர குறிகாட்டிகள் ஆகியவை தொடர்பாக தொகுக்கப்பட்ட நாடு வாரியான தகவல்.
    • ஒரு குறிப்பிட்ட பகுதியில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் அனைத்துத் துணை நிறுவனங்களின் பட்டியல் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களின் வணிகச் செயல்பாடுகளின் நிலை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்