தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் காணப்படும் நான்கு நாடோடிப் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த 1,458 குடும்பங்களில் இந்தக் கணக்கெடுப்பானது நடத்தப் பட்டது.
இந்த அறிக்கையானது மதராஸ் சமூகப் பணிக்கானப் பள்ளியில் 71வது விமுக்தா தினமான செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று வெளியிடப் பட்டது.
இந்த தினத்தில் தான் குற்றப் பழங்குடியினர் அந்தப் பட்டியலில் இருந்து விடுவிக்கப் பட்டு அந்த தினம் ஆகஸ்ட் 31 அன்று ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப் படுகின்றது.
இந்த ஆய்வானது தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் நரிக்குறவர், பூம் பூம் மாட்டுக் காரன் – அதியன், லம்பாடர்கள் மற்றும் காட்டுநாயகர்கள் ஆகியச் சமூகத்தினைச் சேர்ந்த 1485 குடும்பங்களில் மேற்கொள்ளப் பட்டது.
இந்தச் சமூகத்தினர் கல்வி மற்றும் அரசாங்கத் திட்டங்கள் ஆகியவற்றின் அணுகலைப் பெறுவதில் பின்தங்கி உள்ளனர்.
இந்தக் குடும்பங்களில் உள்ள 7% குழந்தைகள் இன்னும் பள்ளிகளில் சேர்க்கப் பட வில்லை.
மீதமுள்ளவர்களில், 53% அளவிலான பேர் தங்கள் பள்ளிகளில் வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு பாகுபாடு நடவடிக்கைகளை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையானது, 12 ஆம் வகுப்பை முடிப்பதற்குள் பல குழந்தைகள் பள்ளியிலிருந்து இடை நிற்பதற்கு வழி வகுத்தது.
இந்த இனத்தைச் சேர்ந்த 1,118 குடும்பங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஒருவர் கூட இல்லை, 1,275 குடும்பங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஒருவர் கூட இல்லை, 1,378 குடும்பங்களில் ஒரு பட்டதாரிகள் கூட இல்லை.
மொத்தம் 807 குடும்பங்கள் தாங்கள் பள்ளிகளில் பயில்வதற்கான அணுகலைப் பெறாமல் இருப்பதாக அல்லது பாகுபாடுகளை எதிர்கொண்டதாகக் கூறினர்.
இதே போல் 713 குடும்பங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான அணுகலை பெறாமல் உள்ளதாக கூறினர்.
1,458 குடும்பங்களில் 267 குடும்பங்களுக்கு மட்டுமே இலவச மனைப் பட்டா வழங்கப் பட்டது.
MGNREGS திட்டம் மூலம் 71 குடும்பங்கள், ஜன்தன் திட்டம் மூலம் 71 குடும்பங்கள், PMAY திட்டம் மூலம் 112 குடும்பங்கள், CMCHIS திட்டம் மூலம் 201 குடும்பங்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்.