TNPSC Thervupettagam

நாட்டின் மிகப்பெரிய அணை - சர்தார் சரோவர் அணை

September 18 , 2017 2672 days 1295 0
  • நாட்டின் மிகப்பெரிய அணையான, சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த அணை நர்மதா நதியில் அமைந்துள்ளது
  • அமெரிக்காவின் கிரான்ட் கூலீ (Grand Coulee) அணை உலகிலேயே மிகப்பெரிய அணையாகும். அதற்கு அடுத்த இடத்தை சர்தார் சரோவர் அணை பிடித்துள்ளது.
  • நாட்டின் மிகப்பெரிய இந்த அணை மொத்தம் 88 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். மத்தியபிரதேசம், குஜராத்தில் சுமார் 214 கி.மீ. தொலைவுக்கு நீண்டுள்ளது.
  • அணையின் மூலம் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் 18 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் குஜராத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பணியாற்றும் பி.எஸ்.எப். வீரர்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
  • நர்மதா நதியில் சாது பெட் தீவில் 182 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டு வருகிறது . இது இந்தியாவிலேயே மிகவும் உயரமான சிலையாக விளங்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்