பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் (BPCL - Bharat Petroleum Corporation Ltd) ஆனது தனது இரண்டாம் தலைமுறை (2G) எத்தனால் உயிரி சுத்திகரிப்பு ஆலையை ஒடிசாவின் பார்கர் மாவட்டத்தின் பவுல்சின்ஹா கிராமத்தில் 2020ல் செயல்நிலைப்படுத்தலை முடிக்கவுள்ளது.
நாட்டில் இதுவே நெல் வைக்கோலிலிருந்து எத்தனாலைத் தயாரிக்கும் முதலாவது உயிரி எரிபொருள் ஆலையாகும்.
எத்தனாலானது பெட்ரோலுடன் கலந்து எரிபொருளாக பயன்படுத்தப்படும்.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை - 2018ன் படி இந்தியாவானது 2030 க்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது உயிரி எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 3 அல்லது 4 சதவீத எத்தனால் மட்டுமே பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது.