TNPSC Thervupettagam

நாட்டின் முதல் உயிரி எரிபொருள் ஆலை - ஒடிசா

October 12 , 2018 2108 days 627 0
  • பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் (BPCL - Bharat Petroleum Corporation Ltd) ஆனது தனது இரண்டாம் தலைமுறை (2G) எத்தனால் உயிரி சுத்திகரிப்பு ஆலையை ஒடிசாவின் பார்கர் மாவட்டத்தின் பவுல்சின்ஹா கிராமத்தில் 2020ல் செயல்நிலைப்படுத்தலை முடிக்கவுள்ளது.
  • நாட்டில் இதுவே நெல் வைக்கோலிலிருந்து எத்தனாலைத் தயாரிக்கும் முதலாவது உயிரி எரிபொருள் ஆலையாகும்.
  • எத்தனாலானது பெட்ரோலுடன் கலந்து எரிபொருளாக பயன்படுத்தப்படும்.
  • தேசிய உயிரி எரிபொருள் கொள்கை - 2018ன் படி இந்தியாவானது 2030 க்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது உயிரி எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 3 அல்லது 4 சதவீத எத்தனால் மட்டுமே பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்