வாழ்க்கைக்கான தத்தமது பணிக் களங்களில் சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்து, நாட்டிற்கு பெருமை சேர்த்த 112 தனித்தன்மை வாய்ந்த பெண்களுக்கு டெல்லியிலுள்ள ராஷ்டிரிய பவனில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பாராட்டுச் சான்றுகளை அளித்தார்.
முதல் பெண்மணிகள் (First Ladies) எனும் சிறப்பிப்புத் தலைப்பின் கீழ் தத்தமது பணித்துறைகளில் சிறந்து விளங்கிய 112 பெண்கள் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் “100 பெண் சாதனையாளர்கள்” பிரச்சாரத்தின் இரண்டாவது நகர்வே இந்த “முதல் பெண்மணிகள்” எனும் பாராட்டு நிகழ்ச்சியாகும்.