நாட்டின் முதல் மக்களவையில் இடம் பெற்றிருந்த எம்.பி ரிஷாங் கெய்ஷிங் காலமானார்
August 24 , 2017 2682 days 970 0
நாட்டின் முதலாவது மக்களவையில் இடம் பெற்றிருந்த எம்.பி.யும், மணிப்பூர் முன்னாள் முதல்வருமான ரிஷாங் கெய்ஷிங் (96) காலமானார்.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள பங்பா கிராமத்தில் 1920-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி பிறந்தவர் ரிஷாங் கேய்ஷிங்.
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், சோசலிஷக் கட்சியில் கேய்ஷிங் சேர்ந்தார். பின்னர், 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதலாவது மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.