நடப்பு நிதியாண்டிற்கான தன்னுடைய கடைசி இருமாத காலத்திற்கான நாணய கொள்கை (Bi-monthly Monetary) மதிப்பாய்வை இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு சமர்ப்பித்துள்ளது.
மறுகொள்முதல் வீதம் (Repo rate) மாற்றப்படாமல் 6 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரொக்கத் தகவமைப்பு வசதிக்கு (liquidity adjustment facility) கீழ் வரும் நேர்மாற்று மறுகொள்முதல் வீதம் (Reverse repo rate) மாற்றப்படாமல் 75 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளிம்பு நிலை வசதி (Marginal standing facility) மற்றும் வங்கி வீதமும் (Bank Rate) மாற்றப்படாமல் 25 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை (uncertainty) மற்றும் பணவீக்கம் (inflation) ஆகியவற்றின் அடிப்படையில் நாணய கொள்கையில் மாற்றங்கள் முடிவு செய்யப்படுகின்றன.
நாணய கொள்கைக் குழு
இந்தியாவில் உள்ள வங்கிகளின் தினசரி அலுவலில் கையாளப்படும் வட்டி விகிதங்களினை நிர்ணயிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு குழுவே நாணய கொள்கைக் குழுவாகும் (Monetary Policy Committee).
இக்குழுவானது ஆறு உறுப்பினர்களை கொண்டது.
இதில் இந்திய ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும், இந்திய அரசால் நியமிக்கப்படும் மூன்று அதிகாரிகளும் அடங்குவர்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநரே இந்தக் குழுவின் பதவி வழி சார் தலைவராவார் (Ex-officio chairperson).
மேலும் இவர் முடிவெடுப்புகளில் சமநிலை உண்டாகும்போது இறுதி வாக்கை (Casting Vote) செலுத்தும் அதிகாரம் கொண்டவராவார்.
இக்குழு பொதுவாக இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடும். ஆண்டிற்கு குறைந்தபட்சம் நான்கு முறையாவது இக்குழு சந்திக்க வேண்டுமென்பது கட்டாயமாகும்.
ஒவ்வொரு சந்திப்பின் பிறகும், வங்கி வட்டி விகிதங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை இது வெளியிடும்.
இந்தியாவின் நாணய கொள்கைகளை நிர்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை ஏற்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டு இக்குழு ஏற்படுத்தப்பட்டது.
நாட்டின் பணவீக்கத்தை (Inflation) 2021 வரை 4% (+2% or -2%) என்ற அளவிலேயே கட்டுப்படுத்தி பராமரிப்பதற்கான பொறுப்பு நாணய கொள்கைக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.