அமெரிக்காவின் கருவூலத்துறை தனது நாணயக் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் சேர்த்து இந்தியாவையும் அதிலிருந்து நீக்கியுள்ளது.
நாணயக் கண்காணிப்புப் பட்டியலின் ஒரு பகுதியாக சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய 7 நாடுகள் உள்ளன.
நாணயத்தைத் தவறாக கையாள்பவர்கள் என்பது அமெரிக்க டாலர் நாணயத்திற்கு எதிராக தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பினை வேண்டுமென்றே குறைப்பது என்ற ஒரு நியாயமற்ற நாணய மதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஒரு அடையாளம் ஆகும்.