நாணயம் மற்றும் நிதி அறிக்கை 2023/24 – இந்திய ரிசர்வ் வங்கி
August 3 , 2024 112 days 183 0
எண்ணிமப் பொருளாதாரம் ஆனது தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தைப் பங்கினை கொண்டுள்ளது என்பதோடு மேலும், இது 2026 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தரவு கசிவு சார்ந்த சராசரிச் செலவினம் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.
இளம் வயதில் கடன் வாங்குபவர்களின் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது என்பதோடு மொத்த தனிநபர் கடன்களில் 65 சதவீதம் ஆனது சுமார் 35 வயதிற்கு குறைவானவர்களுக்கே வழங்கப்படுகிறது.
இந்தியாவின் இணைய ஊடுருவல் ஆனது, 55.3 சதவீதமாக உள்ளது என்ற நிலையில் இது உலகச் சராசரியான 67.1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
100 பேருக்கு ஓர் இணையச் சந்தா என்ற வீதம் ஆனது, 68.2 என்ற அகில இந்திய சராசரி கொண்ட கிராமப்புற இந்தியாவுடன் ஒப்பிடச் செய்யும் போது நகர்ப்புறங்களில் அது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
கிராமப்புறக் குடும்பங்களில், 9.9 சதவீதத்தினருக்கு மட்டுமே கணினிகளை அணுகும் வசதி உள்ளது.
நகர்ப்புறக் குடும்பங்களில் இந்த விகிதம் 32.4 சதவீதமாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஒரு பயனருக்கு ஒரு மாதத்திற்கு ஆகும் சராசரி தரவு நுகர்வு 24.1 GB ஆகும்.