TNPSC Thervupettagam

நாணயம் மற்றும் நிதி அறிக்கை 2023/24 – இந்திய ரிசர்வ் வங்கி

August 3 , 2024 112 days 181 0
  • எண்ணிமப் பொருளாதாரம் ஆனது தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தைப் பங்கினை கொண்டுள்ளது என்பதோடு மேலும், இது 2026 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் தரவு கசிவு சார்ந்த சராசரிச் செலவினம் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • இளம் வயதில் கடன் வாங்குபவர்களின் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது என்பதோடு மொத்த தனிநபர் கடன்களில் 65 சதவீதம் ஆனது சுமார் 35 வயதிற்கு குறைவானவர்களுக்கே வழங்கப்படுகிறது.
  • இந்தியாவின் இணைய ஊடுருவல் ஆனது, 55.3 சதவீதமாக உள்ளது என்ற நிலையில் இது உலகச் சராசரியான 67.1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
  • 100 பேருக்கு ஓர் இணையச் சந்தா என்ற வீதம் ஆனது, 68.2 என்ற அகில இந்திய சராசரி கொண்ட கிராமப்புற இந்தியாவுடன் ஒப்பிடச் செய்யும் போது நகர்ப்புறங்களில் அது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
  • கிராமப்புறக் குடும்பங்களில், 9.9 சதவீதத்தினருக்கு மட்டுமே கணினிகளை அணுகும் வசதி உள்ளது.
  • நகர்ப்புறக் குடும்பங்களில் இந்த விகிதம் 32.4 சதவீதமாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் ஒரு பயனருக்கு ஒரு மாதத்திற்கு ஆகும் சராசரி தரவு நுகர்வு 24.1 GB ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்