இந்தியா மற்றும் சீனாவைச் சார்ந்த இருதரப்பு வணிகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பரிசுப்பொருட்கள் மற்றும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் நாதுலா எல்லை வழியாக 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு வர்த்தகம் தொடங்கியது.
கடந்த ஆண்டு இந்த வர்த்தகம் டோக்லாம் பிரச்சினையைத் தொடர்ந்து தடைபட்டது.
14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா எல்லைப்பகுதி வழியிலான இருதரப்பு வர்த்தகமானது, 44 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.