TNPSC Thervupettagam

நான் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படவில்லை

July 15 , 2018 2197 days 628 0
  • ஹரியானா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில மொழியை ஊக்கப்படுத்த அம்மாநில கல்வித் துறையானது ‘நான் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படவில்லை’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இதன் நோக்கம் ஆசிரியர்களுக்கு அடிப்படை கட்டுமானத் திறனை மேம்படுத்துவதாகும். இதன் மூலம் குழந்தைகள் ஆங்கிலத்தில் அறியவும், படிக்கவும், எழுதவும் மற்றும் பேசவும் ஆசிரியர்கள் உதவுவார்கள்.
  • இம்முயற்சியானது ஏற்கனவே 180 ஆரம்பப் பள்ளிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘Human a people to people india‘ என்ற நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 180 ஆரம்பப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட இம்முயற்சியானது முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்புப் பெட்டக வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ‘பைகளற்ற முறை’ (bag free) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு இதே போன்ற முயற்சியை உத்தரகாண்ட் மாநில அரசு தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக 18,000 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பயிற்று மொழியாக இருந்த இந்தியை ஆங்கிலத்திற்கு அம்மாநில அரசு மாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்