தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ’நான் முதல்வன்’ என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் தமிழக மாநிலத்திலுள்ள சுமார் 10 லட்சம் இளைஞர்களை நாட்டின் நலனுக்காக அவர்களின் திறமையை உணர உதவும் வகையிலான திறன்களுடன் அவர்களைப் பொருந்தச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டமானது அரசினால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் திறமையான மாணாக்கர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.