நான்காவது DISHA கூட்டம் - தமிழ்நாடு
February 17 , 2025
6 days
119
- மாவட்ட மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (DISHA) மீதான குழுவின் நான்காவது மாநில அளவிலான மறு ஆய்வுக் கூட்டம் ஆனது செயலகத்தில் நடத்தப் பட்டது.
- MGNREGA திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய 2,118 கோடி ரூபாய் ஊதிய நிலுவைத் தொகையினை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.
- 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசானது 59 நாட்கள் பணி வேலைகளை வழங்கியது என்ற ஒரு நிலையில் இது தேசியச் சராசரியான 52 நாட்களை விட அதிகமாகும்.
- பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தினைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசானது இந்தியாவில் முன்னோடியாக இருந்துள்ளது.
- 2021-2022 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட 3,61,591 வீடுகளில் மொத்தம் 3,43,958 வீடுகள் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளன.
- 2023-24 ஆம் ஆண்டில், 1,51,674 கர்ப்பிணிப் பெண்களுக்கு சுமார் 45.52 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
- நடப்பு ஆண்டில், முதல் குழந்தை மற்றும் இரண்டாவது மகளைப் பெற்றெடுக்கும் தாய் மார்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டது.

Post Views:
119