TNPSC Thervupettagam

நான்காவது உலகளாவிய பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வு

October 24 , 2024 37 days 120 0
  • நான்காவது உலகளாவிய பவளப்பாறை வெளிர்தல் (GCBE4) நிகழ்வு ஆனது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது.
  • இது தற்போது மிகவும் பெரும் பரவலாக காணப்படுகின்றதாகவும், 2014-2017 ஆகிய ஆண்டுகளில் இருந்த பவளப்பாறை வெளிர்தல் நிலைகளை விட 11 சதவீதத்திற்கும் அதிகமாக விஞ்சியதாகவும் உள்ளது.
  • இந்தக் கடுமையான மற்றும் தீவிரமான உலகளாவியப் பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வு முந்தைய நிகழ்வை விட கிட்டத்தட்ட பாதி நேரத்தில் நிகழ்ந்ததாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • GCBE4 நிகழ்வின் ஒரு பெரும் பகுதியாக 20 மாதங்களில் குறைந்தபட்சம் 77 சதவீத உலகளாவியப் பவளப்பாறைப் பகுதிகள் வெளிர்தல் அளவிலானப் பெரும் வெப்பத் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.
  • அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பவளப்பாறைப் பகுதிகளில் சுமார் 99.9 சதவீதப் பகுதிகள் ஆனது இந்த நிகழ்வின் போது வெளிர்தல் அளவிலான பெரும் வெப்பத்  தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்