TNPSC Thervupettagam

நான்காவது காலாண்டில் வேலைவாய்ப்பு விகிதம்

October 2 , 2022 785 days 429 0
  • காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வின் (QES) நான்காவது சுற்று (ஜனவரி - மார்ச் 2022) அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது நிறுவனம் அடிப்படையிலான அகில இந்தியக் காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வின் (AQEES) ஒரு பகுதியாகும்.
  • 2021 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட காலாண்டு வேலை வாய்ப்பு ஆய்வின் மூன்றாவது சுற்றுடன் ஒப்பிடும் போது சுமார் நான்கு லட்சம் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
  • உற்பத்தித் துறையானது 38.5% தொழிலாளர்களைப் பணியமர்த்தி, நாட்டின் மிகப் பெரிய நிறுவன முதலாளியாகத் தொடர்கிறது.
  • இதைத் தொடர்ந்து கல்வித் துறை (21.7%), IT/BPO துறை (12%) மற்றும் சுகாதாரத் துறை (10.6%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஏறக்குறைய 80% நிறுவனங்களில் 10 முதல் 99 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
  • சுமார் 12% நிறுவனங்களில் 10க்கும் குறைவான தொழிலாளர்களேப் பணியில் உள்ளனர்.
  • கணக்கெடுக்கப்பட்ட 1.4% நிறுவனங்களில் மட்டுமே குறைந்தது 500 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.
  • மூன்றாம் காலாண்டில் 31.6% ஆக இருந்த பெண் தொழிலாளர்களின் பங்கேற்பானது நான்காவது காலாண்டு அறிக்கையில் 31.8% ஆக அதிகரித்துள்ளது.
  • இருப்பினும், சுகாதாரத் துறையில் உள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 52% பேர் பெண் தொழிலாளர்களாக உள்ளனர்.
  • கல்வி, நிதிச் சேவைகள் மற்றும் IT/ BPO ஆகிய துறைகள் தொடர்பான வேலைவாய்ப்பு சதவீதங்கள் முறையே 44%, 41% மற்றும் 36% ஆக இருந்தது.
  • 86.4% தொழிலாளர்கள் வழக்கமானப் பணியாளர்கள் என்றும், 8.7% பேர் ஒப்பந்த ஊழியர்கள் என்றும், அதைத் தொடர்ந்து சாதாரண ஊழியர்கள் (2.3%) மற்றும் சுய தொழில் செய்பவர்கள் (2%) என்றும் இந்தக் கணக்கெடுப்பு கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்