TNPSC Thervupettagam

நான்காவது காவல் துறை ஆணையம் - எம் ஷீலா பிரியா

October 17 , 2019 1922 days 1539 0
  • நான்காவது காவல் துறை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ஓய்வு பெற்ற அதிகாரியான எம் ஷீலா பிரியா இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
உறுப்பினர்கள்
  • வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரான வி பி பி பரமசிவம், தமிழ்நாடு அரசின் ஓய்வு பெற்ற இணைச் செயலாளர் எம் அறச்செல்வி ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
உறுப்பினர் செயலாளர்
  • இணைய வழிக் குற்றப் பிரிவு காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குனரான ஜி. வெங்கட்ராமன்.
பணி
  • ஷீலா பிரியா ஆணையமானது பின்வருபவை குறித்து ஆராய இருக்கின்றது.
    • நுண்ணறிவுத் தகவல் சேகரிப்பு
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
    • இணைய வழிக் குற்றங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
    • மூன்றாவது ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து இந்த ஆணையம் ஆராயும்.
காவல் துறை ஆணையத்தின் வரலாறு
  • இதற்கு முன்னர் 1969, 1989, 2006 ஆம் ஆண்டுகளில் மூன்று காவல் துறை ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
  • இந்த ஆணையங்கள் முறையே ஆர்.ஏ. கோபால்சாமி, பி. சபாநாயகம், ஆர். பூர்ணலிங்கம் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்