TNPSC Thervupettagam

நான்காவது சரக்குப் பெட்டக முனையம்

February 19 , 2018 2342 days 712 0
  • மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜவஹவர்லால் நேரு துறைமுகக் கழகத்தின் நான்காவது சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.
  • இதனோடு சேர்த்து இந்த துறைமுகத்தின் சரக்குகளைக் கையாளும் திறன் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
  • இந்தியாவின் மிகப்பெரிய சரக்குப் பெட்டக முனையம் இதுவேயாகும்.
  • இந்த முனையம் தாய்க்கப்பல் எனப்படும் நீண்டதூரம் செல்லும் கப்பல்களையும் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களையும் ஒரு கிலோமீட்டர் ஓடந்துறையில் வைத்து கையாளும் திறன் கொண்டது.
  • நான்காவது சரக்குப் பெட்டக முனையம் வடிவமைப்பு, கட்டுமானம், நிதியுதவி, இயக்கம் மற்றும் பரிமாற்றம் என்ற அடிப்படையில் 30 வருட காலத்திற்கான சலுகைக் கால அளவில் 7915 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு இருக்கின்றது.
  • இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டது.
  • இந்த முனையம் தனி வழியான சரக்கு இரயில் பாதையோடும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே தடத்தில் (பாதையில்) 350 பெட்டகங்களை நிறுத்தும் வசதியும் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்