TNPSC Thervupettagam

நான்கு கட்ட போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையம் (NCORD) செயல்முறை

February 17 , 2025 10 days 85 0
  • சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகப் பிரச்சினையைத் தீர்க்கவும், உள்ளூர் காவல் துறை மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகளுக்கு இடையேயான பெரும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • நான்கு கட்ட போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையம் (NCORD) என்ற செயல்முறை ஆனது நிறுவப்படும்.
  • இது மத்திய மற்றும் மாநில போதைப் பொருள் சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் மீதான பெரும் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்தும் துறையில் உள்ள பிற பங்குதாரர்களிடையே ஒரு சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.
  • போதைப்பொருள் சட்ட அமலாக்கம் தொடர்பான தகவல்களுக்காக வேண்டி ஒரு மிக முழுமையான NCORD இணைய தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க பறிமுதல்களின் விசாரணையை மிகவும் நன்கு கண்காணிப்பதற்காக, போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் (NCB) தலைமை இயக்குநர் தலைமையில் ஒரு கூட்டு ஒருங்கிணைப்புக் குழு (JCC) அமைக்கப்பட்டு உள்ளது.
  • ஒவ்வொரு மாநிலம் / ஒன்றியப் பிரதேசத்திலும் ஒரு கூடுதல் தலைமை இயக்குநர் / தலைமை ஆய்வாளர் நிலையிலான காவல்துறை அதிகாரி தலைமையில் ஒரு மிகப் பிரத்தியேக போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழு (ANTF) நிறுவப்பட்டுள்ளது.
  • போதைப்பொருள் சார்ந்த தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக என்று 2020 ஆம் ஆண்டில் 1985 ஆம் ஆண்டு NDPS சட்டத்தின் கீழ் தேசியப் புலனாய்வு நிறுவனத்திற்கு அரசாங்கம் அதிகாரம் அளித்துள்ளது.
  • 1933 என்ற 24x7 சேவை வழங்கும் கட்டணமில்லாத தேசிய போதைப்பொருள் தடுப்பு உதவி எண்ணுடன் "மடக்-பதர்த் நிஷேத் அசூசனா கேந்திரா" (MANAS) எனப்படும் தேசிய போதைப் பொருள் விலக்க அழைப்பு மையம்  ஆனது உருவாக்கப்பட்டுள்ளது.
  • முதன்மை ஆலோசனை மற்றும் உடனடி உதவியை வழங்குவதற்காக என்று போதைப் பொருள் ஒழிப்பிற்கான கட்டணமில்லாத உதவி எண் 14446 ஆனது அரசாங்கத்தால் பேணப்பட்டு வருகிறது.
  • இந்தியாவானது  மிகவும் பாதிக்கப்படக்கூடிய 272 மாவட்டங்களில் நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) வசதியினை அறிமுகப்படுத்தி, பின்னர் அதனை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அதனை விரிவுபடுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்