நான்கு கருத்துரு சார்ந்த மையங்கள் - தேசிய துளிமத் திட்டம்
March 22 , 2025 12 days 50 0
தேசியத் துளிமத் திட்டம் என்பது துளிமத் தொழில்நுட்பத்தில் பெருமளவு அதி நவீன முன்னேற்றங்களை மேற்கொள்ளும் ஒரு நாடு தழுவிய முன்னெடுப்பாகும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 17 மாநிலங்கள் மற்றும் 2 ஒன்றியப் பிரதேசங்களில் 14 தொழில்நுட்பக் குழுக்களை ஒன்றிணைத்து நான்கு கருத்துரு சார் மையங்கள் (T-Hubs) அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் நான்கு கருத்துரு சார் மையங்கள் நிறுவப் பட்டுள்ளன:
இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (IISc) பெங்களூரு
புது டெல்லியின் தகவல் தொடர்பு மேம்பாட்டுக் கல்வி மையத்துடன் இணைந்து சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT)
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT), மும்பை
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT), புது டெல்லி.