காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்ட சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு உள்ளாட்சி அமைப்பை மாநகராட்சிக் கழகமாக அறிவிப்பதற்கு நிர்ணயிக்கப் பட்ட மக்கள் தொகை மற்றும் வருமான அளவுருக்களை இந்த மசோதா திருத்தி அமைத்துள்ளது.
தற்போது, மூன்று லட்சத்துக்குக் குறையாத மக்கள்தொகை மற்றும் 30 கோடி ரூபாய்க்கு குறையாத வருடாந்திர வருமானம் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாக அறிவிக்கலாம்.
ஆனால் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட மசோதாவின்படி, இரண்டு லட்சம் மக்கள்தொகை மற்றும் 20 கோடி ரூபாய் வருமானம் உள்ள எந்த உள்ளாட்சி அமைப்பும் மாநகராட்சியாக அறிவிக்கப்படலாம்.
மேலும், இந்தச் சட்டத்தினைத் திறம்பட செயல்படுத்த சில புதிய விதிகளைச் சேர்க்கும் வகையில் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தினை திருத்தியமைப்பதற்கான மற்றொரு மசோதாவையும் அரசு அறிமுகப் படுத்தியுள்ளது.