சீனாவில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வட்டன் வண்ணத்துப் பூச்சியானது 61 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் தென்பட்டுள்ளது.
பெரிய நான்கு வட்டன் (யிப்திமா காண்ட்டிலெய்) சட்யிரினே வண்ணத்துப் பூச்சி இனமாகும்.
இது கடைசியாக 1957 ஆம் ஆண்டில் (கிழக்கு) அசாமின் மார்கெரிட்டா எனுமிடத்தில் தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிம்ஃபாலிடே குடும்பத்தில் சுமார் 6,000 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன.
இந்தியாவில் பதிவாகியுள்ள இந்த 35 யிப்திமா இனங்களில் 23 இனங்கள் வடகிழக்குப் பகுதிகளில் காணப்படுவதாக பதிவாகியுள்ளன.
இந்தியாவில் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,327 வகையான வண்ணத்துப் பூச்சிகளில் 600க்கும் மேற்பட்டவை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளன.