நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கியானது ஓர் அற்புதமான ஆய்வுப் பணியைத் தொடங்க தயாராக உள்ளது.
இது பெருவெடிப்பு காலத்திற்கு பல பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கருந்துளைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள தொடங்கும்.
இந்த ஆய்வுப் பணியானது 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.
அத்தகைய "பழமையான கருந்துளைகள்" இருப்பது நிரூபிக்கப் பட்டால், சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்டத்தின் ஆரம்ப காலத்திய சகாப்தங்களைப் பற்றிய நமது புரிதலுக்கு இது சவாலாக அமையும்.
ஹாக்கிங்கின் ஹாக்கிங் கதிர்வீச்சு கோட்பாடு ஆனது கருந்துளைகள் கதிர்வீச்சை "கசியச்" செய்து இறுதியில் ஆவியாகிவிடும் என்று முன்மொழிகிறது.
பிரதான கருந்துளைகள் ஆவியாகாமல் பல பில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்க, அவை ஹாக்கிங்கின் கணிப்புகளை மீறியதாக இருக்க வேண்டும்.