தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகமானது, (TANUVAS - Tamil Nadu Veterinary and Animal Sciences University) பூர்வீக நாய் ஆராய்ச்சி மையத்தினை அமைக்க முடிவு செய்துள்ளது.
இது "நாய்களின் இனங்களை மீட்டெடுத்துப் பாதுகாப்பதற்கான மையம்" ஆகும்.
தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகமானது, தமிழ்நாட்டின் நாய் வகைகளான ராஜபாளையம், சிப்பிப் பாறை, கன்னி, கோம்பை போன்ற இனங்களை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும்.
இந்த நாய் இனங்கள் பாதுகாப்பு மற்றும் வேட்டையாடும் திறன்களுக்கு பெயர் பெற்றவையாகும்.
கோழிப் பண்ணைகள் மற்றும் நாட்டு மாடுகளுக்காக ஆராய்ச்சி மையங்களை இந்தப் பல்கலைக் கழகம் நடத்தி வந்தாலும், நாட்டு நாய்களை வளர்ப்பதற்கான திட்டத்தை இப்பல்கலைக் கழகம் தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.