TNPSC Thervupettagam

நாய்கள் இனப்பெருக்க மையம்

April 25 , 2022 948 days 608 0
  • தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகமானது, (TANUVAS - Tamil Nadu Veterinary and Animal Sciences University) பூர்வீக நாய் ஆராய்ச்சி மையத்தினை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • இது "நாய்களின் இனங்களை மீட்டெடுத்துப் பாதுகாப்பதற்கான மையம்" ஆகும்.
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகமானது, தமிழ்நாட்டின் நாய் வகைகளான ராஜபாளையம், சிப்பிப் பாறை, கன்னி, கோம்பை போன்ற இனங்களை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும்.
  • இந்த நாய் இனங்கள் பாதுகாப்பு மற்றும் வேட்டையாடும் திறன்களுக்கு பெயர் பெற்றவையாகும்.
  • கோழிப் பண்ணைகள் மற்றும் நாட்டு மாடுகளுக்காக ஆராய்ச்சி மையங்களை இந்தப் பல்கலைக் கழகம் நடத்தி வந்தாலும், நாட்டு நாய்களை வளர்ப்பதற்கான திட்டத்தை இப்பல்கலைக் கழகம் தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்