முழுமையான டிஜிட்டல் ரேடியோ பயன்பாட்டின் பரிமாற்றத்திற்காக உலகின் முதல் நாடாக நார்வே தனது தேசிய FM ஒலிபரப்பை (Frequency Modulation/ அதிர்வெண் பண்பேற்றி) நிறுத்தியுள்ளது.
சிறந்த ஒலித் தரம், அதிக எண்ணிக்கையிலான சேனல்கள், FM radio வை விட எட்டு மடங்கு குறைந்த செலவு பயன்பாடு போன்றவை டிஜிட்டல் ரேடியோ வழியாக பெற இயலும் என்பதால் இப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய ரேடியோ சேனல்களில் மட்டுமே இந்த பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான உள்ளூர் ரேடியோ நிலையங்கள் FM மூலமே ஒலிபரப்பை மேற்கொள்ளும்.