இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority of India - NALSA) நிர்வாகத் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான மதன் பீமாராவ் லோகுரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
சட்ட சேவைகள் ஆணையச் சட்டம், 1987-ன்படி NALSA அமைக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றங்களிலும் தீர்ப்பாயங்களிலும் வழக்குரைஞர்களின் சேவையைப் பெற முடியாத ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறைகளில் இது இலவச சட்ட உதவிகளை வழங்குகிறது.