இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான UB பிரவீன் ராவ் என்பவர் 2020-21 ஆம் ஆண்டிற்கான மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களுக்கான தேசியக் கூட்டமைப்பின் (Nasscom - National Association of Software and Services Companies) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள அசன்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த மேலாண் இயக்குநரான ரேகா எம் மேனன் என்பவர் நாஸ்காமின் துணைத் தலைவராக நியமிக்கப்பட இருக்கின்றார்.
இது இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்பாடு வெளிப்புற ஒப்படைப்புத் துறை (Business Process Outsourcing industry) ஆகியவற்றுக்கான ஒரு வர்த்தக மன்றமாகும்.
1988 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நாஸ்காம் கூட்டமைப்பானது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.