TNPSC Thervupettagam

நிஃப்டி பங்கு சேமிப்புக் குறியீடு

May 3 , 2018 2255 days 754 0
 
  • தேசியப் பங்குச்சந்தையின் ஒரு அங்கமான இந்திய குறியீட்டு சேவைகள் மற்றும் பொருட்கள் லிமிடெட் ஆனது நிஃப்டி பங்கு சேமிப்பு குறியீட்டை தொடங்கியுள்ளது.
  • நிஃப்டி பங்கு சேமிப்பு குறியீடு பல்வேறு பரஸ்பர நிதிகளால் வழங்கப்படும் பங்கு சேமிப்பு நிதிகளுக்கான திறனளவாக (Bench mark) செயல்படும்.

  • இலாப பங்குத் தொகையால் வரும் வருமானம் மற்றும் விலை நகர்வுத் தொகை (இலாபம்/நட்டம்) ஆகியவற்றை அளவிடும் ஒரு மொத்த ஆதாயக் குறியீடே இக்குறியீடு ஆகும்.
  • இக்குறியீட்டிற்கான அடிப்படை தேதி ஏப்ரல் 1 2005 மற்றும் அடிப்படை மதிப்பு 1000 ஆகும். இக்குறியீடு நாளின் இறுதி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

குறியீட்டு சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருள் நிறுவனம்

  • 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் மஹாராஷ்டிராவின் மும்பையில் அமைந்துள்ளது.
  • இது பல்வேறு வகைப்பட்ட குறியீடுகள், குறியீடு தொடர்பான சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருட்களை மூலதன சந்தைகளுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • இது தேசிய பங்குச் சந்தையின் உத்திசார் முதலீட்டு நிறுவனத்தின் துணை அமைப்பாக செயல்படுகிறது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்