TNPSC Thervupettagam

நிகர சுழியம் கார்பன் உமிழ்வு – இந்திய இரயில்வே

June 14 , 2021 1134 days 618 0
  • இந்திய ரயில்வேயானது 2030 ஆம் ஆண்டுக்கு முன் நிகர சுழியம் என்ற கார்பன் உமிழ்வு நிலையை அடைதல் (net-zero carbon emission)  என்பதை நோக்கிச் செயலாற்றி வருகிறது.
  • Head on Generation எனும் மின்சார வழங்கீட்டு அமைப்பு, உயிரிக் கழிப்பறைகள், LED பல்புகள் மற்றும் தானியங்கி இரயில்பெட்டி சுத்திகரிப்பு மையங்கள் போன்ற பல நவீன முறைகளை இந்திய இரயில்வே செயல்படுத்தி வருகின்றது.
  • தற்போது இந்திய ரயில்வேயானது நீண்டகால மற்றும் குறைவான கார்பன் செயல்பாடு எனும் நோக்குடன் கூடிய ஒரு குறைகார்பன் பசுமைப் போக்குவரத்து பிணையம் (low carbon green transportation network) மாதிரியான ஒரு பிரத்தியேக சரக்கு வழித்தடங்களை (கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய பிரத்தியேக சரக்கு வழித்தடம்) உருவாக்கி வருகிறது.
  • மேலும் இது நிலையான மேம்பாட்டு இலக்குகளைக் கருத்தில் கொண்டு கட்டமைக்கப்பட்ட இரயில் நிலையங்களுக்கு பசுமைச் சான்றிதழையும் வழங்கிடச்  செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்