TNPSC Thervupettagam

நிகர்நிலைக் காடுகள்

November 23 , 2020 1468 days 605 0
  • கர்நாடகா மாநில அரசானது அம்மாநிலத்தின் நிகர்நிலைக் காடுகள் பிரிவில்  மொத்தமுள்ள 9.94 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 6.64 இலட்சம் ஹெக்டேர் காடுகளை மிக விரைவில் மறு வகைப்படுத்த உள்ளது.
  • நிகர்நிலைக் காடுகளை வரையறை செய்வதில் மாநிலங்கள் முழு சுதந்திரத்தைக் கொண்டுள்ளன.
  • நிகர்நிலைக் காடுகள் என்பது வரலாற்று ஆவணங்கள் அல்லது அரசு ஆவணங்களின் காடுகளாக வகைப்படுத்தப்படாத, ஆனால் காடுகளாகக் காட்சியளிக்கும் ஒரு வகை நிலப் பகுதிகளாகும்.
  • நிகர்நிலைக் காடுகள் இந்தியாவில் உள்ள மொத்த வனப் பகுதியில் 1% அளவினைக்  கொண்டுள்ளன.
  • வனப் பாதுகாப்புச் சட்டம், 1980 என்ற சட்டத்தின் படி வனப் பகுதியின் பாதுகாப்பானது இந்திய உச்சநீதிமன்றத்தினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
  • 1996 ஆம் ஆண்டில், கோதவர்மன் என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றமானது நிகர்நிலைக் காடுகளை அடையாளம் கண்டு, அவற்றை வகைப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்