இந்திய ரிசர்வ் வங்கி அதிக அளவிலான நிதிப் பரிமாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்நேர பெருந்திரள் தீர்வின் (Real Time Gross Settlement - RTGS) மூலம் வாடிக்கையாளர்களின் நிதிப் பரிமாற்றங்களுக்கான கால அளவை நீட்டித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜுன் 01 ஆம் தேதியிலிருந்து நிதிப் பரிமாற்றத்திற்கான நேரம் ஒன்றரை மணி நேரம் நீட்டிக்கப்படும். அதாவது மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணி வரை அது நீட்டிக்கப்படும்.
இங்கு நிகழ் நேரம் என்பது வங்கிப் பணியாளர்கள் தாங்கள் பெற்ற அறிவுறுத்தல்களை செயல்படுத்துவதைக் குறிக்கின்றது.
இங்கு “பெருந்திரள் தீர்வு” என்பது நிதிப் பரிமாற்ற செயல்முறைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவை தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை (National Electronic Fund Transfer – NEFT) போன்று தொகுப்புகளாக அல்லாமல் தனித்தனியாக நிகழ்வதைக் குறிக்கின்றது.
RTGS திட்டத்தின் வழியாக பரிமாற்றப்படும் நிதிக்கு எதுவும் “உச்ச வரம்பு” நிர்ணயிக்கப்படவில்லை.