சுலாப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரானபிந்தேஸ்வர் பதக், நிக்கி ஆசியா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவ்விருது ஆசிய வளர்ச்சியில் இவருடைய பங்களிப்பிற்காக ஜப்பானில் வழங்கப்பட்டது.
இந்திய சமூக சீர்திருத்தவாதியாக கருதப்படும்பதக் நாட்டின் மிகப்பெரிய சவால்களில் இரண்டினை சரிசெய்துள்ளார். அவையாவன, தரமற்ற சுகாதாரம் மற்றும் பாரபட்சம் (Discrimination). இவ்விருது வழங்கப்பட்ட மூன்று நபர்களுள் இவர் ஒருவராவார்.
இவர் சுலாப் இண்டர்நேஷனல் நிறுவனத்தை 1970 ஆம் ஆண்டு நிறுவினார். இந்நிறுவனம் மனித உரிமைகள், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் இன்னும் பிற சமூக சேவைகளை ஊக்குவிப்பதற்காக பணியாற்றும் அரசுசாரா நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம், சுலாப் ஃபிளஷ் கம்போஸ்டிங் டாய்லெட்டுகளை இந்தியா முழுவதும் உருவாக்கி வழங்கியுள்ளது. இந்த கழிவறைகள், சிறந்த சுகாதாரம், ஊரகப் பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலிருந்து மனிதர்களுக்கு விடுதலையளித்தல் ஆகியவற்றில் மிகப்பெரும் பங்களிப்பை செய்கிறது.
Nikkei Inc ஆனது ஜப்பானிலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனங்களுள் ஒன்றாகும். இதுவே, நிக்கி ஆசியா விருதை 1996 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இவ்விருது பின்வரும் மூன்று துறைகளில் ஆசியாவில் தங்களுடைய போற்றத்தக்க பங்களிப்பை செய்வதற்கு வழங்கப்படுகிறது.