TNPSC Thervupettagam

நிசார் செயற்கைக்கோள்

August 5 , 2021 1117 days 1040 0
  • மேம்பட்ட ரேடார் வரைபடமிடுதல் முறையைப் பயன்படுத்தி உலக நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுவதற்கான இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்ட NISAR (நாசாஇஸ்ரோ சிந்தெட்டிக் அப்பெர்சர் ரேடார்) என்ற செயற்கைக்கோளானது 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • இது ஒரு இரட்டை வரிசை (L கற்றை மற்றும் S கற்றை) ரேடார் வரைபடமிடுதல் திட்டமாகும்.
  • இது நிலம், தாவரங்கள் மற்றும் தாழ்வெப்ப மண்டலப் பகுதிகளில் ஏற்படும் சிறு மாற்றத்தினையும் அளவிடக் கூடியது.
  • நாசா நிறுவனமானது L கற்றையிலான (band) SAR மற்றும் அதன் இணை அமைப்புகளை உருவாக்கி வருகிறது.
  • இஸ்ரோ நிறுவனமானது S கற்றையிலான SAR விண்வெளி கலம், ஏவுகலம் மற்றும் இதர ஏவுகல அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி வருகிறது.
  • NISAR ஆனது இஸ்ரோ மற்றும் நாசா ஆகியவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒன்றிணைவு ஆகும்.
  • 2015 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அவர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த போது இந்தியாவும் அமெரிக்காவும் இத்திட்டத்தினை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டன.

Surya A August 06, 2021

NISAR KU NIBAR NU IRUKUTHU SIR

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்