TNPSC Thervupettagam

நிசார்(NISAR) – இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சி

August 5 , 2017 2667 days 3065 0
  • NISAR என்பதன் பெயர் விரிவாக்கம்: NASA-ISRO Synthetic Aperture Radar / நாசா-இஸ்ரோ சிந்தெடிக் அபெர்ச்சர் ராடார்.
  • இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (Indian Space Research Organisation - ISRO) மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (National Aeronautics and Space Administration - NASA) ஆகியவை இணைந்து, நிசார் எனும் கூட்டு விண்வெளி ஆய்வுத் திட்டத்தினை 2021 ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ளன .
  • நிசார் ராடார் அமைப்பு இரண்டு அலைக்கற்றைகளில் இயங்கக்கூடியது ஆகும் .
  • இதில் L அலைக்கற்றையில் இயங்கும் ராடார் கருவியினை உருவாக்கும் பொறுப்பை நாசா நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. S அலைக்கற்றையில் இயங்கும் ராடார் கருவியினை இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் உருவாக்குகின்றது .
  • இந்த L மற்றும் S அலைக்கற்றை ராடார் கருவிகள் இரண்டும் , இஸ்ரோவின் விண்கலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு GSLV செயற்கைக்கோள் ஏவு ஊர்தி மூலமாக விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பிறகு , கீழ்க்காணும் செயல்கள் திட்டமிடப்பட்டுள்ளன:
    • விண்வெளியில் இருக்கும் கருவிகளை அளவு திருத்துவது மற்றும் தரவுகளை ஒப்பிட்டு சரி பார்ப்பது.
    • அறிவியல் சார்ந்த திட்டங்களை உருவாக்குதல் மற்றும் முயன்றடைதல்
    • தரவு செயலாக்கம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துதல்
    • ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்விக் கூடங்களில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் .
  • சமாதான நோக்கங்களுக்காக விண்வெளியை பயன்படுத்தவும், ஆய்வு நடத்தவும் , இஸ்ரோ – நாசா இடையே 2008 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது . அந்த உடன்படிக்கையின் கீழ் செயல்படுத்தப்படும் நிசார் திட்டம் 2034 ஆம் ஆண்டு வரை செல்லுபடி ஆகும் .
  • நிசார் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் செயல்படுத்துதலுக்குப் பிறகு இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறையில் பல இணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்