20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐதராபாத்தில் ஒரு ஆங்கிலேயத் தளபதியிடம் விற்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய வாளானது இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டு வரப்பட உள்ளது.
1903 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி அல்லது அரசத் தர்பாரில் ஹைதராபாத் நிஜாம் ஆன மஹ்பூப் அலி கான் ஆறாம் ஆசாப் ஜா அவர்களால் (1896-1911) இந்த வாள் காட்சிப் படுத்தப்பட்டது.
இந்த தல்வார் (வாள்) ஆனது 1905 ஆம் ஆண்டில் மும்பை படைப்பிரிவின் படைத் தளபதி (1903-1907) ஜெனரல் சர் ஆர்க்கிபால்ட் ஹண்டர் என்பவரால் வாங்கப்பட்டது.
இந்த வாளானது ஹைதராபாத் பிரதமர் மகாராஜா சர் கிஷன் பெர்ஷாத் பகதூர் யாமின் உஸ்-சுல்தானத் என்பவரால் விற்கப்பட்டது.