TNPSC Thervupettagam

நிதி ஆயோக்கின் அதிநவீன அரசுப் போக்குவரத்து மாதிரிகள்

July 29 , 2017 2720 days 1068 0
  • 6 அதிநவீன, பெருசன விரைவுப் போக்குவரத்துத் திட்டங்களின் (Mass Rapid Transportation) பரிந்துரைக்கு நிதி ஆயோக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஹைபர்லூப் (Hyperloop) , மெட்ரினோ (Metrino), பாட் டாக்ஸி (Pod Taxi) போன்ற நவீன வகைப் போக்குவரத்து கட்டமைப்புகள் இந்தியாவில் வரவிருக்கின்றன.
  • இந்த ஆறு போக்குவரத்துத்திட்டங்களுக்கு, நிதி ஆயோக் குழுவிடம் , மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் கோரியதன் பேரில் , இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • அதிநவீனப் போக்குவரத்துத் திட்டங்கள் – ஹைபர்லூப் (Hyperloop) , மெட்ரினோ (Metrino), பாட் டாக்ஸி (Pod Taxi), ஸ்டாட்லர் பேருந்துகள் (stadler buses), கலப்பு தொழில்நுட்ப பேருந்துகள் (hybrid buses) மற்றும் சரக்கு ரயில் சாலைகள் (freight rail road).
  • நாட்டில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க, தற்போதைய பொதுப் போக்குவரத்து முறைகள்போதுமானதாக இல்லாத காரணத்தால், இத்தகைய புதிய தொழில் நுட்பங்களை இந்தியா நாடியுள்ளது .
  • முதல் கட்டமாக , சோதனை ஓட்டம் செய்து , பாதுகாப்பு அளவுருக்கள் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பிறகு , மெட்ரினோ போன்ற போக்குவரத்து முறைகள் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முடிவில் பொதுமக்களுக்கு சேவையில் அமர்த்தப்படலாம் .
  • இத்தகைய உலகத் தரத்திலானபாதுகாப்பு அளவுருக்களை சோதித்து உறுதி செய்வதற்காக ,6 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அமைத்துள்ளது . இதில் ரயில்வே துறையின் மூத்தஅதிகாரிகள் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்