நிதி ஆயோக்கின் அதிநவீன அரசுப் போக்குவரத்து மாதிரிகள்
July 29 , 2017 2676 days 1036 0
6 அதிநவீன, பெருசன விரைவுப் போக்குவரத்துத் திட்டங்களின் (Mass Rapid Transportation) பரிந்துரைக்கு நிதி ஆயோக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஹைபர்லூப் (Hyperloop) , மெட்ரினோ (Metrino), பாட் டாக்ஸி (Pod Taxi) போன்ற நவீன வகைப் போக்குவரத்து கட்டமைப்புகள் இந்தியாவில் வரவிருக்கின்றன.
இந்த ஆறு போக்குவரத்துத்திட்டங்களுக்கு, நிதி ஆயோக் குழுவிடம் , மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் கோரியதன் பேரில் , இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதிநவீனப் போக்குவரத்துத் திட்டங்கள் – ஹைபர்லூப் (Hyperloop) , மெட்ரினோ (Metrino), பாட் டாக்ஸி (Pod Taxi), ஸ்டாட்லர் பேருந்துகள் (stadler buses), கலப்பு தொழில்நுட்ப பேருந்துகள் (hybrid buses) மற்றும் சரக்கு ரயில் சாலைகள் (freight rail road).
நாட்டில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க, தற்போதைய பொதுப் போக்குவரத்து முறைகள்போதுமானதாக இல்லாத காரணத்தால், இத்தகைய புதிய தொழில் நுட்பங்களை இந்தியா நாடியுள்ளது .
முதல் கட்டமாக , சோதனை ஓட்டம் செய்து , பாதுகாப்பு அளவுருக்கள் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பிறகு , மெட்ரினோ போன்ற போக்குவரத்து முறைகள் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முடிவில் பொதுமக்களுக்கு சேவையில் அமர்த்தப்படலாம் .
இத்தகைய உலகத் தரத்திலானபாதுகாப்பு அளவுருக்களை சோதித்து உறுதி செய்வதற்காக ,6 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அமைத்துள்ளது . இதில் ரயில்வே துறையின் மூத்தஅதிகாரிகள் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.