e-FAST India முன்னெடுப்பின் ஒரு பகுதியாக NITI GearShift சவாலை தொடங்குவதாக நிதி ஆயோக் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த ஹேக்கத்தான் இந்தியாவில் வெறும் சுழிய அளவிலான உமிழ்வினைக் கொண்ட சரக்குந்துகளின் (ZETs) பயன்பாட்டினை ஏற்றுக் கொள்வதற்கான புதுமையான வணிக மாதிரிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நாட்டில் நிலவும் மிக அதிகபட்ச பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை நிவர்த்தி செய்கிறது.
சாலை சார்ந்த சரக்குப் போக்குவரத்தானது இந்தியாவின் வருடாந்திர டீசல் நுகர்வில் 55 சதவீதமும், சாலைப் போக்குவரத்திலிருந்து வெளியாகும் CO2 வெளியேற்றத்தில் சுமார் 40% பங்கினையும் கொண்டுள்ளது.