TNPSC Thervupettagam

நிதி ஆயோக் அமைப்பின் மறுசீரமைப்பு 2024

July 21 , 2024 5 hrs 0 min 47 0
  • மத்திய அரசானது நிதி ஆயோக் அமைப்பை, நான்கு முழுநேர உறுப்பினர்கள் மற்றும் 15 மத்திய அமைச்சர்களை, பதவி வழி உறுப்பினர்கள் அல்லது சிறப்பு அழைப்பாளர்களாகக் கொண்டு மறுசீரமைத்துள்ளது.
  • பிரதமர் அதன் தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் K. பெரி துணைத் தலைவராகவும் தொடர்ந்து பதவி வகிப்பர்.
  • அறிவியலாளர் V.K. சரஸ்வத், வேளாண் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தைகள் நல மருத்துவர் V.K. பால் மற்றும் பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோரும் தொடர்ந்து முழு நேர உறுப்பினர்களாகப் பதவி வகிப்பர்.
  • நான்கு பதவி வழி உறுப்பினர்களாக மத்தியப் பாதுகாப்பு, உள்துறை, வேளாண்மை மற்றும் நிதி அமைச்சர்கள் பதவி வகிப்பர்.
  • இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தேசிய அமைப்பு எனும் ‘நிதி ஆயோக்’ அமைப்பு 2015 ஆம் ஆண்டில் 65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவிற்குப் பதிலாக உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்