நிதி ஆயோக்கின் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீடு
June 17 , 2018 2357 days 697 0
நிதி ஆயோக்கின் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீட்டுப் பட்டியலில் குஜராத் முதலிடத்திலும் ஜார்கண்ட் மோசமான பங்களிப்பாளர் என்ற கடைசி இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் குஜராத்தைப் பின்தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மத்திய நீர்வள ஆதாரங்களுக்கான அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒட்டு மொத்த நீர் மேலாண்மைப் பட்டியல் எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கையின் படி, ஜார்கண்ட், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் நீர் மேலாண்மையில் மிக மோசமான மாநிலங்களாக இடம் பெற்றுள்ளன.
வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களில் 2016-2017ம் ஆண்டு கால கட்டங்களில் திரிபுரா சிறந்த மாநிலமாகவும், அதனைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் அசாம் மாநிலங்களும் உள்ளன.
2015-16 கால கட்டத்தின் படி பட்டியலில் படிப்படியான மாற்றம் என்ற விதிகளின் அடிப்படையில் பொது மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தையும், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களில் திரிபுரா முதலிடத்தையும் பிடித்துள்ளன.
இவ்வகையிலான முதல் பட்டியல் பின்வரும் அமைச்சகங்கள்/அரசு இணைந்து நீர் தரவு சேகரிப்பை மேற்கொண்டு வெளியிடப்பட்டன.