இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முதன்மை அறிக்கையானது நாடு முழுவதும் உள்ள நிதி உள்ளடக்கத்தின் பரவலை வெளிக்கொணர்கிறது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 60.1 ஆக இருந்த நிதி உள்ளடக்கமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 64.2 ஆக இருந்தது.
நிதி உள்ளடக்கக் குறியீடானது எந்தவொரு ‘அடிப்படை மதிப்பீட்டு ஆண்டு’ இல்லாமல் கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதால் இது அனைத்துப் பங்குதாரர்களின் பெரும் நிதி உள்ளடக்கத்தினை நோக்கிய ஒட்டு மொத்த முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலக் கட்டத்திற்கான வருடாந்திர நிதி உள்ளடக்கக் குறியீடு 53.9 ஆக இருந்தது என்ற நிலையில் இது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலக் கட்டத்தில் 43.4 ஆக இருந்தது.
இந்த நிதி உள்ளடக்கக் குறியீடானது ஆண்டுதோறும் ஜூலை மாதம் வெளியிடப் படுகிறது.