TNPSC Thervupettagam

நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிமன்றக் குழு நிதி நிகழ்வுகள் மீது சீராய்வு

November 25 , 2017 2557 days 895 0
  • நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி மன்றத்தின் துணைக் குழு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மீது பாதிப்பை ஏற்படுத்தும் உலகளாவிய மற்றும் உள்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை ஆய்வு செய்தது.
  • இந்தக் குழுவிற்கு ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் தலைமை தாங்கினார்.
  • நிதி நிலைமைத் தன்மை மற்றும் வளர்ச்சி மன்றம் என்பது இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழுவாகும்.
  • இந்த மன்றத்தின் தலைவர் மத்திய நிதி அமைச்சர் ஆவார்.
  • இதன் உறுப்பினர்களுள்
    • நிதித்துறையின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர்கள் (ரிசர்வ் வங்கி, செபி, ஐஆர்டிஏ, பிஎஃப்ஆர்டிஏ)
    • பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் அல்லது நிதித் துறையின் செயலாளர்
    • தலைமை பொருளாதார ஆலோசகர்.
  • இந்த புதிய அமைப்பு நிதி நிலைத் தன்மையை பராமரிப்பது, நிதித்துறை வளர்ச்சி, ஒழுங்குமுறை ஆணையங்களிடையே ஒத்துழைப்பு, மற்றும் பொருளாதாரத்தின் மீதான பெரும் தாக்கங்கள் கொண்ட நிபந்தனைகளை கண்காணிப்பது ஆகிய செயல்களுக்கான நடைமுறையை பலப்படுத்தி முறைப்படுத்த திட்டம் தீட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்