நிதிக் கொள்கைக் குழுவின் (MPC - Monetary Policy Committee) அறிவுரையின்படி இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தை 35 புள்ளிகள் அளவில் குறைத்து, 5.40 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.
இது வங்கிக் கடன்களை குறைந்த வட்டியில் பெற உதவும்.
தொடர்ந்து நான்காவது முறையாக MPC ஆனது ரெப்போ விகிதங்களைக் குறைத்துள்ளது.
இந்த ரெப்போ விகிதக் குறைப்பு பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
4 சதவிகிதம் என்ற அளவிற்கு நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத்திற்கான இடைக்கால இலக்கை அடைதல்.