TNPSC Thervupettagam

நிதிக் கொள்கைக் குழு கூட்டம்

December 6 , 2018 2183 days 767 0
  • ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 5-வது நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து வட்டி விகிதங்களிலும் மாற்றம் இல்லாமல் தொடருவதற்கு ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர்.
  • ரெப்போ விகிதம் 6.5 சதவீதமும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாகவும் தொடர்ந்து இருக்கும்.
  • மேலும் ஆர்.பி.ஐ (RBI) ஆனது விளிம்பு நிலை விகிதம் மற்றும் வங்கி விகிதம் ஆகிய இரண்டும்75 சதவிகிதமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
  • இக்குழு ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அவர்கள் ஆர்பிஐயின் மூன்று அதிகாரிகள் மற்றும் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் ஆவர்.
  • இக்குழுவில் முடிவுகள் பெரும்பான்மை அடிப்படையில் அமைந்திருக்கும். முடிவுகள் எட்டப்படாமல் சமமான வாக்குகள் பெற்றிருந்தால் ஆர்பிஐ ஆளுநர் அறுதி வாக்குரிமையைப் (Casting vote) பயன்படுத்துவார்.
  • இக்குழுவின் தற்போதைய முடிவின்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை வருடாந்திர பணவீக்கமானது 4 சதவிகிதமாக தொடர வேண்டும் என்றும் அது 6 சதவிகிதத்திற்கு அதிகம் இல்லாமலும் 2 சதவிகிதத்திற்கு  குறைவாக இல்லாமலும் இருக்க வேண்டும் என்றும் இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்